Ad Code

Ticker

6/recent/ticker-posts

அலகு 02 இலங்கையில் குடியேற்றங்கள் தாபிக்கப்படுதல் (பாடவேளை 06 ) OL syllabus

அலகு 02
  •  இலங்கையில் குடியேற்றங்கள் தாபிக்கப்படுதல் (பாடவேளை 06 ) 

பாடவேளை 01 

01 இலங்கையின் ஆரம்பக் குடியேற்றங்களை வாழ்க்கைமுறை , தொழினுட்ப அடிப்படையில் பிரிக்கப்படும் முறைகள் எவை ?

 1 வரலாற்றுக்கு முற்பட்ட காலம்.

 2 முன் வரலாற்றுக்காலம்.

3 வரலாற்றுக்காலம் 

வரலாற்றிற்கு முற்பட்ட காலம்


 02 வரலாற்றிற்கு முற்பட்ட காலம் என்றால் என்ன ?

*எழுத்துமூல வரலாற்றுக்கு முற்பட்ட காலம் அதாவது எழுத்துமூல ஆதாரங்கள் இல்லாத காலம் வரலாற்றுக்கு முற்பட்ட காலம் எனப்படும். 

*இலக்கிய மூலாதாரங்களில் குறிப்பிடப்படும் புராதன காலத்திற்கு முந்திய காலம் பொதுவாக வரலாற்றிற்கு முற்பட்ட காலம் எனப்படும் . 

03 வரலாற்றிற்கு முற்பட்ட காலமானது கலாகர் அடிப்படையில் எவ்வாறு பிரிக்கப்படும் .

*நீண்டகாலம் நிலைத்திருந்த கற்காலம் ( வரலாற்றிற்கு முற்பட்ட காலம் )
*உணவுகளை உட்கொள்வதில் ஆர்வம் காட்டி உலோகப் பயன்பாட்டுடன் நிரந்தரக் குடியேற்றங்களை நிறுவிய காலம் ( முன் வரலாற்றுக்காலம் ) 

04 இலங்கையில் முதலில் குடியேறிய மனிதன் யார் ?

 *ஆதி ஹேபமோசேப்பியன் 

05 வரலாற்றுக்கு முற்பட்ட காலத்துக்குரிய ஆதாரங்கள் கிடைத்துள்ள இரு இடங்களைக் குறிப்பிட்டு அவை பற்றிக் குறிப்பிடுக ?

 இரத்தினபுரியும் அதன் அயற்சூழல் பிரதேசங்களும்

 சுமார் தொண்ணூறு அடி ஆழத்தில் அமைந்துள்ள இந்த அகழ்வுகளில் கிடைக்கப்பெறும் கனிமப்படிமங்களில் காணப்படும் சரளைக் கற்களுடன் கூடிய மண்படைகளில் கல்லாயுதங்களும் , விலங்குகளின் எலும்புகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன . இவை பிளைத்தோசின் ( பனியுகம் ) காலத்தில் மண்ணில் புதையுண்டுள்ளன . மலைப்பாங்கான பிரதேசத்தில் நிகழ்ந்த மண்ணரிப்பினால் உருவான சரளைக்கற் படிவுகள் தாழ்நிலங்களில் புதைந்துள்ளன .

இரணைமடுப் படிமங்கள்

*இப்படிவுகள் இரணைமடுக்குளத்தின் சூழலில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது . அதிவரண்ட வலய நிலத்தினடியில் களிமண்ணுடன் கூடிய சரளைக்கல் படிவுகளில் இவை காணப்பட்டுள்ளன . இங்கு கற்காலத்துக்குரிய கல்லாயுதங்கள் கிடைத்துள்ளன . இவை பிளைத்தோசின் காலத்தில் நிலவிய குறுகிய வெப்ப காலத்தில் மண்ணில் புதையுண்டுள்ளன . 

06 இலங்கையின் கற்கால மனிதன் வாழ்ந்து வந்துள்ள காலநிலை வலயங்கள் எவை ?

1 ஈர வலயம் ( மலைநாட்டு ஈரவலயம் , உயர் மலை நாட்டு ஈரவலயம் )

2 அரைவறள் வலயம் 

3 தாழ்நில உலர் வலயம் 

4 தாழ்நில இடை உலர் வலயம் 

5 வறள் வலயம் 

6 மலைநாட்டு இடை உலர் வலயம்

 07 இவ்வாறான காலநிலை வலயங்களைத் தீர்மானிக்கும் பிரதான காரணியாக அமைவது

* மழைவீழ்ச்சியின் வேறுபாடு

 08 வரலாற்றிற்கு முற்பட்ட கால மனிதன் வாழ்ந்த பின்வரும் இடங்களின் கால கட்டங்களைக் குறிப்பிடுக ? 

இடங்கள்                               காலகட்டம் 

பதிராஜவெல            125000 ஆண்டுகள்

பூந்தல                            80000 ஆண்டுகள்

பாகியன்கல                38000 ஆண்டுகள்   

பட்டதொம்பலன         28000 ஆண்டுகள் 

கித்துள்கல பெலிலேனா  15000 ஆண்டுகள்

பெல்லன்பதிபெல்லஸ 12000 ஆண்டுகள்

பாடவேளை 02

 வரலாற்றுக்கு முற்பட்ட கால குடியிருப்புக்களின் இயல்புகள்

 01 வரலாற்றுக்கு முற்பட்ட மனிதர்கள் வாழ்ந்ததாக அடையாளம் காணப்பட்டுள்ள இடங்கள் எவை ?

1 தாழ்நில மழைக் காடுகள் 

2 வில்லுப் புல்நிலம் 

3 உலர் வலயக் காடுகள் 

4 கரையோரங்களின் களப்புக்கள் 

02 வரலாற்றுக்கு முற்பட்ட மனிதனின் குடியேற்றங்களின் தன்மையின் அடிப்படையில் இரண்டு பகுதிகளும் எவை ? 

* திறந்த வெளியான வேட்டையிடங்கள்

 கரையோர வெட்டவெளிகள் - மினிஹாகல்கந்த , புத்தல . பதிராஜவெல்

தாழ்நில உலர்வலய வெட்டங்ளி -  பெல்லன்பதிபெல்லஸ

 மலையகப் பிரதேச வெட்டவெளி - பண்டாரவளை , ஹொட்டன் சமவெளி

*இயற்கையான கற்குகைள் .

 தாழ்நில ஈரவலயக் குகைகள் - பாகியன்கல , பட்டதொம்பலென . கித்துள்கல பெலிலென

தாழ்நில உலர்வலயக் குகைகள் - சிகிரியாபொத்தான , அலிகல்

03 வரலாற்றுக்கு முற்பட்ட காலம் குடியிருப்புக்களின் அமைவிடங்ளைத் தீர்மானித்த காரணிகள் எவை ?

• உணவு பெறும் வாய்ப்பு 

• நீர் கிடைக்கும் வாய்ப்பு

 *இயற்கை சக்திகளில் இருந்து பாதுகாப்பைப் பெற்றுக்கொள்ளல்

 • கல்லாயுதங்களைப் பெற்றுக்கொள்ளக்கூயடிதான இடங்கள்

வரலாற்றுக்கு முற்பட்ட கால மனிதனின் வாழ்க்கை முறையின் இயல்புகள்

04 வரலாற்றிற்கு முற்பட்ட கால மனிதனின் வாழ்க்கை முறையின் இயல்புகள் எவை ? 

1 இடம்பெயரும் வேட்டைக்காரர்களாக இருந்தமை - வேட்டையாடியும் , அலைந்து திரிந்தும் உணவைத் தேடினர் . தினமும் 7 கிலோமீற்றர் வரை நடந்துள்ளனர் . 

2 மழைக்காலங்களில் கற்குகைளில் தங்கினர் .

3 வரண்ட காலப்பகுதிகளில் வெட்டவெளிகளில் தங்கினர் 

4 சிறிய சமூகக் குழுக்களாக வாழ்ந்தனர் . பொதுவாக ஒரு குழுவில் 15 - 25 இடையிலான நபர்கள் அடங்கியிருந்தனர் . 50 பேர் கூடுதலாக இருந்திருப்பர் . ( பண்டாரவளையின் சேர்ச்ஹில் என்னும் இடத்தில் 150 சதுர மீற்றர் பரப்பில் 25 நபர்கள் வாழ்ந்தமைக்கு ஆதாரம் கிடைத்துள்ளது . பெல்லன்பதிபெல்லஸ என்னுமிடத்தில் 120 சதுரமீற்றர் பரப்பில் 30 பேர் வாழ்ந்துள்ளனர் . ஒரே இடத்தில் பல எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டமை மூலம் இதனை அறியலாம் )

வரலாற்றுக்கு முற்பட்ட கால மக்களின் உணவுப்பழக்க முறைகள்

 05 வரலாற்றிற்கு முற்பட்ட கால மனிதனின் அதிகம் கிடைத்துள்ள வலயங்கள் எவை ?

1 தாழ்நில உவர் வலயம் 

2 ஈரவலயம்

06 வரலாற்றிற்கு முற்பட்ட கால மனிதனின் உணவுப்பழக்க வழக்க முறைகள் எவை ? 

1 தான் வாழும் சூழலுக்கு ஏற்ப உணவுப்பழக்கத்தைக் கொண்டிருந்தமை . ( தாழ்நில ஈரவலயத்தில் வாழ்ந்த மனிதன் நத்தைகளை உண்டமை ) 

2 வேட்டையாடி தமக்கு தேவையான உணவைப் பெற்றனர் . ( மாடு . காட்டெருமை . காட்டுப்பன்றி , மான் , மரை , முள்ளம்பன்றி , முயல் , மரஅணில் , காட்டுக்கோழி என்பன வேட்டையாடப்பட்டன )

3 தாவர உணவுகளையும் உட்கொண்டமை ( காட்டுவாழை . காட்டுப்பலா . வள்ளிக்கிழங்கு . கித்துள்விதை போன்றவற்றை உட்கொண்டனர் )

4 உணவைப்பதப்படுத்த தீயைப் பயன்படுத்தியமை . ( 12500 வருடங்களுக்கு முன்னர் காட்டுப்பலாவின் விதைகளைச் சுட்டு உண்டமைக்கு கித்துள்கலபெலிலேனாவில் ஆதாரம் கிடைத்துள்ளது )

5 உப்பைப் பயன்படுத்தியுள்ளனர் . ( கித்துள்கலபெலிலேனாவில் கண்டெடுக்கப்பட்ட நத்தைகளின் எச்சங்கள் கடற்கரைப் பகுதயிலிருந்து கொண்டுவரப்பட்ட உப்புடன் கலந்திருந்தமை )

6 தாழ்நில ஈரவலய நீர்நிலைகளில் வளர்ந்த தித்தயா போன்ற மீனினங்களை உண்டனர் .
 

வரலாற்றுக்கு முற்பட்ட கால மக்களின் தொழினுட்ப முறைகள் 


07 வரலாற்றிற்கு முற்பட்ட கால மனிதனின் தொழினுட்ப முறைகள் எவை ? 

1 கேத்திர கணிதப் பொறிமுறை உருவிலான நுணுக்கமான கல்லாயுதங்கள் உருவாக்கப்பட்டிருந்தமை . ( பளிங்குப் பாறைகளினாலும் , சிறிய மஞ்சள் நிறப்பளிங்குக் கல்லினாலும் இவை செய்யப்பட்டுள்ளன . இவை 4.5 சென்ரிமீற்றர் அளவிற்குட்பட்டதாகும் . )

 2 நன்கு கூர்மைப்படத்தப்பட்ட இச்சிறிய கல்லாயுதம் தடி ஒன்றினால் அல்லது மிருக எலும்பு ஒன்றுடன் கட்டிப் பாவிக்கப்பட்டது . 

3 பல்வேறு தேவைகளுக்கு உபகரணங்களைப் பயன்படுத்தியுள்ளனர் . ( வேட்டையாடல் . வெட்டுதல் , தட்டையாக்குதல் , தோண்டுதல் போன்றவற்றிற்கு ) மரக்கோல்கள் , விலங்கு எலும்புகள் , கற்கள் போன்றவற்றால் உபகரணங்களை செய்தமை .

 4 ஆபரணங்களைப் பயண்படுத்தியமை ( பாகியன்கல குகையில் சிப்பியைத் துளைத்து செய்யப்பட்ட கழுத்தில் அணியும் அட்டியல் கண்டுபிடிக்கப்பட்டமை ) 

5 கருங்கல்லில் தட்டையான சுத்தியல் , அம்மி போன்றவற்றையும் பயன்படுத்தியுள்ளன் .

வரலாற்றுக்கு முற்பட்ட கால மனிதனின் உடலமைப்பு பற்றிய விடயங்கள்


 08 வரலாற்றிற்கு முற்பட்ட கால மனிதனின் உடலமைப்பின் இயல்புகள் எவை ? 

1 வளர்ந்த ஆணின் உயரம் 174 சென்ரிமீற்றரும் . பெண்ணின் உயரம் 166 சென்ரிமீற்றரும் ஆகும் . 

2 அவர்களது பற்கள் பெரியனவாக அமைந்திருந்தன . 

3 அகன்ற மூக்கையும் அகன்ற நாடியையும் கொண்டிருந்தனர் . 

4 வளர்ந்த ஆணின் மூளை 1600 கனசென்ரிமீற்றரும் , பெண்ணின் மூளை 920 கனசென்ரிமீற்றருமாகும் .

5 அவர்களது ஆயுட்காலம் 35 - 40 வயதுக்கு இடைப்பட்டதாகக் காணப்பட்டது . 

வரலாற்றுக்கு முற்பட்ட கால அபிசார முறைகள் ( பழக்கவழக்கங்கள் , வழக்காறுகள் )


 09 வரலாற்றுக்கு முற்பட்ட கால மனிதனின் சடங்கு சம்பிரதாய முறைகள் அறிந்துகொள்ள உதவியாக அமைவது எது ? 

மரணச்சடங்கு முறை 

10 வரலாற்றிற்கு முற்பட்ட கால மனிதனின் ங்கு சம்பிரதாய முறைகள் எவை ? 

1 இறந்துபோன உறவுகளின் உடலிகளை கற்குகைளில் புதைத்தனர் . ( கித்துள்கலபெலிலென பிரதேசத்தில் 12 எலும்புக்கூடுகளும் , | செல்லி பெல்லன்பதிபெல்லஸவில் 30 எலும்புகளும் கிடைத்துள்ளன ) 

2 உடல்கள் உக்கிப்போன பின்னர் அதைத்தோண்டி மீண்டும் எடுத்து பாதுகாப்பாக புதைத்துள்ளனர் . ( பட்டதொம்பலென குகைளில் வளைத்துப் புதைக்கப்பட்ட எலும்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது ) 

3 மரணித்தவர்களின் மண்டையோட்டையும் , எலும்பையும் செந்நிறப்பாறையினால் நிறம் தீட்டினர் .
 
4 இறந்தவர்களுக்கு மரணச்சடங்கு நடத்தினார்கள் . ( இராவணஎல்ல குகையில் கிடைக்கப்பெற்ற மண்டையோட்டில் துளையிடப்பட்டிருந்தது . கித்துள்கல . பட்டதொம்பலென , பாகியன்கல குகை என்பவற்றில் மரணச்சடங்குகள் தொடர்பான சம்பிரதாயங்கள் இடம்பெற்றுள்ளன )

பாடவேளை 03


 முன்வரலாற்றுக் காலம்

01 முன்வரலாற்றுக்காலம் என்றால் என்ன ?

 வரலாற்று முற்பட்டகால முடிவிற்கும் வரலாற்றுக்கால ஆரம்பத்திற்கும் இடைப்பட்ட காலமே முன் வரலாற்றுக் காலம் எனப்படும் . 

02 வரலாற்றிற்கு முற்பட்ட காலத்தில் ஏற்பட்ட மாற்றங்கள் எவை ? 

1 இரும்புப் பாவனையின் ஆரம்பம் இதனால் இரும்பு யுகம் எனப்பட்டது . 

2 சுட்ப்பட்ட மண்பாவனையின் ஆரம்பம் .
 
3 முறையான மரணச்சடங்குகளின் ஆரம்பம் , 

4 நிலையான குடியிருப்புக்கள் ஆமைக்கப்பட்டமை 

5 விவசாயம் செய்ய ஆரம்பித்தமை 

03 கல்லாயுதங்கள் முழுமையாகக் கைவிடப்பட்ட காலம் எது ?

 முன்வரலாற்றுக் காலத்தின் இறுதிப்பகுதி 

முன்வரலாற்றுக் காலத்தின் தோற்றம்

04 முன்வரலாற்றுக்காலம் உருவாகியமைக்கான காரணங்கள்

1 காலநிலையில் ஏற்பட்ட மாற்றம் 

2 சனத்தொகை அதிகரிப்பு * செல்வச்சந்திரன் 

05 முன் வரலாற்றுக்கால ஆதாரங்கள் கிடைக்கப்பெற்றுள்ள இடங்கள் எவை ?

1 சப்ரகமுவ மாகாணத்தின் வடகிழக்குப்பகுதி 

2 ஊவா மாகாணத்தின் தென்மேற்குத்திசை 

06 இலங்கையின் முன்வரலாற்றுக்காலம் எத்தனை ஆண்டுகள் பழமையானவை ? 

கி.மு 2400 ஆண்டுகள்




 

Post a Comment

0 Comments